How to Grow a YouTube Channel in 2020: Top Best Tips for Small YouTubers

How to Grow a YouTube Channel in 2020: Top Best Tips for Small YouTubers

யுடியூப் சேனலைத் தொடங்கி பலருக்கும் இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்கும். அல்லது இன்னும் அந்த பிரச்சனையில் இருக்கலாம். என்ன அது?

சரியான பார்வையாளர்கள் இல்லை!

ஆம்… பல சேனல்களுக்கு சரியான பார்வையாளர்கள் இருப்பதில்லை. சரியான வீடியோக்கள்… பல பயனுள்ள தகவல்கள் என எல்லா விதத்திலும் சரியாக உள்ள வீடியோ மற்றும் சேனல்தான். ஆனாலும் பார்வையாளர்கள் மற்றும் சப்ஸ்கிரைபர்கள் இல்லை.

என்ன அதற்கான தீர்வு?

டிஜிட்டல் மார்கெட்டிங்

என்னதான் YouTube சேனல் தொடங்கி பல நல்ல வீடியோக்களை செய்தாலும்… அதனை மார்கெட்டிங் செய்யவில்லை என்றால் வீண்தான்.

YouTube ல் செய்ய வேண்டிய பலவற்றை நாம் சரியாக செய்யாமல் இருக்கலாம். அவை என்னென்ன என்பதை கீழுள்ள பட்டியலில் பார்க்கலாம்.

  • சரியான தலைப்பு (Title)
  • அதற்கான விளக்கம் (Description)
  • டேக் (Tag)
  • முகப்பு படம் (Thumbnail)
  • சமூக வலைதள பகிர்வு (Social Media Sharing)
  • கடைசியில் வீடியோ லிங்க் (End Screens)
  • ஐ கார்ட் (Cards)

இப்படி பல்வேறு நிலைகளில் ஒரு வீடியோவை நாம் சரியாக பதிவேற்றம் செய்தால் சில நாட்களிலேயே நல்ல பார்வையாளர்களைப் பெற முடியும்.

தொடர்ச்சியான வீடியோ பதிவு (Posting to YouTube Multiple Times per Week)

வாரத்திற்கு ஒரு தடவைக்கு மேல் வீடியோக்களை பதிவிடும் YouTube சேனல்கள் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றன. மேலும் பரிந்துரைக்கப்பட்ட பார்வைகளைப் பெறுகின்றன என்பதை பலரும் குறிப்படுகின்றனர். முடிந்தால், ஒரு வீடியோ வாரத்திற்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை உங்களது YouTube சேனலில் வீடியோவை வெளியிடுங்கள். குறிப்பாக நீங்கள் தொடங்கத்தில்  பார்வையாளர்களை பெற முயற்சித்தால் வாரத்திற்கு பல வீடியோக்களை பதிவிடுங்கள். உங்கள் சேனலை YouTube Algorithm விரைவாக உயர்த்தும்.

நன்கு தெரிந்தவற்றை வீடியோவாக்க முயற்சியுங்கள் (Try a video that is well known)

உங்களுக்கு நன்குத் தெரிந்த விஷயங்களை மனதில் வைத்து வீடியோவை உருவாக்குங்கள். உங்களுக்குப் பிடித்த மற்றும் நன்கறிந்தவற்றை வீடியோவாக உருவாக்கினால் மட்டுமே நிலையான மற்றும் சரியான பார்வையாளர்களைப் பெறமுடியும். உங்கள் சேனலில் எந்த வகையான வீடியோக்கள் உள்ளது என்பதை ஒருமுறை பார்க்கும் வாடிக்கையாளர் அதைப் பற்றி அறிந்து கொள்ள உங்கள் சேனலையே நாடுவார்.

எடுத்துக்காட்டாக நீங்கள் TNPSC சார்ந்த வீடியோக்களை பதிவிடுகிறீர்கள் என்றால் அதற்காக பலர் வருவார்கள். அதே போல்தான் tutorials வகையானதா அல்லது entertainment வகையானதா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எல்லா விதமான வீடியோக்களை பதிவேற்றி குழப்பக்கூடாது.

குறைவான நீளத்தில் வீடியோ அறிமுகம் (Short Intros)

நமது சேனலுக்கான Intro Video குறைவான நீளத்தில் இருப்பது நலம். 10 செகன்ட் அளவில் இருந்தால் போதுமானது.

அறிமுகம் செய்யும் வீடியோ நீளமாக இருந்தால் அது பலரை முகம் சுழிக்க வைக்கலாம்.

வீடியோவில் என்ன சொல்லப் போகிறீர்கள் என்பதை ஒரு அறிமுகமாகச் சொல்லி பின்னர் Intro வைத் தரலாம்.

முகப்பு படம் (Thumbnail)

நமது வீடியோவில் என்ன சொல்லப் போகிறோம் என்பதை அறிவதற்கு Thumbnail பயன்படுகிறது. எவ்வளவு அழகாக அதனை வடிவமைக்க முடியுமோ அவ்வளவு சிறப்பாக வடிவமைத்தல் நலம். இதற்காக Photoshop, CorelDraw என பல மென்பொருள்களை உபயோகிக்கலாம்.

அதிக நேரமுள்ள வீடியோக்கள் (Create Long Videos to Improve Watch Time)

அதிக நேரம் ஓடும் வீடியோக்களை உருவாக்கினால் நமது பார்வையாளர்கள் பார்க்கும் நேரத்தை அதிகரிக்கலாம். அதிக நேரம் பார்க்கும் பொழுது நமது சேனலின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

தொடர்ச்சியான வீடியோக்கள்  (Develop Videos as a Series)

ஒரு தகவலை நாம் உருவாக்கும் பொழுது அதனை ஒரு தொடர் போன்று உருவாக்கினால் சிறப்பான பலனைத் தரும். ஒன்றைக் குறித்து பல்வேறு நிலைகளில் தொடர்ச்சியாக உருவாக்கும் பொழுது அது நல்ல பார்வையாளர்களை தருகிறது. எடுத்துக்காட்டாக நமது சேனலில் Photoshop, Corel Draw, InDesign, Pagemaker, YouTube, Camtasia, Filmora etc. என பல தொடர்ச்சியான வீடியோக்களை Series வடிவில் இருப்பதை அறியலாம்.

நேரலை Go Live on YouTube

நமது சேனலில் அவ்வப்போது நேரலை ஒன்றை நடத்துங்கள். இதனால் உங்களுக்கும் பார்வையாளர்களுக்கு இடையே உள்ள உறவு நிலைப்புத் தன்மையில் இயங்கும்.

இதேபோன்று எண்ணற்றவை இருக்கின்றன. இருப்பினும் இதனை சரியாக கடைப்பிடித்தால் YouTube சேனல் வளரும்.

 

Add Comment

en English
X
+