டிஜிட்டல் மார்க்கெட்டிங் தமிழில் (Digital Marketing in Tamil)

டிஜிட்டல் மார்க்கெட்டிங் தமிழில் (Digital Marketing in Tamil)

நாளுக்கு நாள் இணையத்தின் (Internet) பயன்பாடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. பல்வேறு ஆய்வுகள் இதனை உறுதிசெய்கின்றது. சிறியவர்கள் முதல் பெரியவர்களை என கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 5% அதிகரித்திருப்பதாக அமெரிக்க வலைளதம்  ஒன்று தெரிவித்துள்ளது. மக்கள் ஆன்லைனில் பொருட்களை நம்பி வாங்கும் அளவிற்கு இணையத்தின் பயன்பாடு நம்பகத்தன்மையோடும் அதே வேளையில் வேகமாகவும் வளர்ந்து வருகிறது.

ஆஃப்லைன் மார்கெட்டிங் – ஆன்லைன் மார்கெட்டிங்

நேரடியாக கடைக்குச் சென்று பொருட்களை வாங்கும் பழக்கம் மக்களிடையே குறைந்து வருகிறது. சிறு தொழிலானலும் அதனை ஆன்லைனில் சந்தைப்படுத்த வியாபாரிகளும் முன்வருகின்றர். நேரடியாகவும், ஆன்லைனிலும் நமக்கான வாடிக்கையாளர்களை கவரவேண்டுமென்பது அவர்களுக்கு முக்கிய தேவையாகியுள்ளது. எனவே பல்வேறு ஆஃபர்கள் கொடுத்து தங்களின் வியாபாரத்தை நிலைநிறுத்த ஆன்லைன் மார்கெட்டையும் பயன்படுத்துகின்றனர்.

டிஜிட்டல் மார்கெட்டிங் (Digital Marketing)

அதிகரித்துவரும் இணைய பயன்பாட்டில் அனைவரும் தங்களை அல்லது தங்களின் வணிகத்தை சந்தைப்படுத்த  வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நேரடியாக களத்தில் எவ்வாறு மார்கெட்டிக் செய்துகொண்டனரோ அவ்வாறே தற்போது டிஜிட்டல் யுகத்திலும் செய்யவேண்டியுள்ளது. இதனைத்தான் டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing) என அழைக்கின்றோம். இந்தத் துறையில் வேலைவாய்ப்பும் தற்போது பெருகிவருகிறது.

தமிழில் டிஜிட்டல் மார்கெட்டிங் (Digital Marketing in Tamil)

டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing) துறை ஒவ்வொரு மொழிசார்ந்து இயங்கவில்லை. அல்லது தமிழ் மொழியில் இந்த துறைசார்ந்த பல்வேறு தகவல்கள் கிடைப்பதில்லை. எனவே இந்த துறைசார்ந்த பல்வேறு வினாக்களுக்கு விடையும், அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதையும் இந்த பகுதியில் பார்க்கலாம்.

கீழ்வரும் தலைப்புகளின் அடிப்படையில் இதனை வரிசைப்படுத்தலாம்.

 • டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றால் என்ன?
 • டிஜிட்டல் மார்க்கெட்டிங் எடுத்துக்காட்டுகள்
 • டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்பவர் என்ன செய்வார்?
 • உள்ளடக்க சந்தைப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்?
 • எல்லா வணிகங்களுக்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் வேலை செய்யுமா?
 • ஒரு நிறுவனத்திற்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பங்கு என்ன?
 • நான் எந்த வகையான டிஜிட்டல் உள்ளடக்கத்தை உருவாக்க வேண்டும்?
 • எனது உள்ளடக்கத்திலிருந்து முடிவுகளைப் பார்க்க எவ்வளவு நேரம் ஆகும்?
 • டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்ய எனக்கு பெரிய பட்ஜெட் தேவையா?
 • மொபைல் மார்க்கெட்டிங் எனது டிஜிட்டல் மார்க்கெட்டிங் உத்திக்கு எவ்வாறு பொருந்துகிறது?
 • இன்று டிஜிட்டல் மார்க்கெட்டிங் எவ்வாறு வரையறுக்கிறார்கள்?

டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றால் என்ன?

இணையம் அல்லது இணையம் சார்ந்த பிற பொருட்களைப் பயன்படுத்தி சந்தைப்படுத்தும் முறையை டிஜிட்டல் மார்கெட்டிங் என்கிறோம். தற்கால முறையில் டிஜிட்டல் வடிவில் கிடைக்கக்கூடிய எல்லா டேட்டாக்களைக் கொண்டு என்னெ்ன தேவை என்பதை அறிந்து அவர்களுக்கு அதனை வாங்க அல்லது அதனைக் குறித்து விவாதிக்க டிஜிட்டல் மார்க்கெட்ங் உதவுகிறது.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் எடுத்துக்காட்டுகள்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமூக வலைதளங்கள் (Facebook, Twitter, Instagram, etc.,) வீடியோக்களைப் பார்வையிடும் YouTube மாதிரியான தளங்கள் மற்றும் நமக்குத் தேவையான தகவல்களைப் பெற பயன்படுத்தும் தேடுபொறிகள் ஆகியவைகள் அனைத்திலும் விளம்பரங்கள் வருவதை நம்மால் பார்க்க முடியும். இவை அனைத்துமே டிஜிட்டல் மார்கெட்டிங் தான். இதனை கீழ்வருவனவற்றில் அறியலாம்.

 • Search Engine Optimization (SEO)
 • Content Marketing
 • Social Media Marketing
 • Pay Per Click (PPC)
 • Affiliate Marketing
 • Native Advertising
 • Marketing Automation
 • Email Marketing
 • Online PR
 • Inbound Marketing

டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்பவர் என்ன செய்வார்?

ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing) தொழிலை மேற்கொள்பவர் மேற்காணும் உத்திகளின் வாயிலாக ஒரு வியாபாரத்தை அல்லது ஒரு நபரை தேவையான வகையில் சந்தைப்படுத்துவார். அரசியல் அல்லது வியாபாரம் என எதுவாயினும் இங்கு மார்கெட்டிங் அவசியமாகிறது. எனவே தனிப்பட்ட நபர்கள் ஆன்லைனில் பதிவிடும் சுய விவரங்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்வார்.

உள்ளடக்க சந்தைப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்?

உள்ளடக்கம் (Content) மற்றும் டிஜிட்டல் (Digital Marketing) என இரண்டுக்கும் ஒரு நூலிலையில் வித்தியாசம் உள்ளது. உள்ளடக்கடத்தை தனித்துவமானதாக உருவாக்கினால் அதனை சந்தைப்படுத்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் வேகமாக உதவுகிறது.

எல்லா வணிகங்களுக்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் வேலை செய்யுமா? ஆம். உலகம் ஆன்லைனை நோக்கி பயணம் செய்யத் துவங்கியுள்ளது. இனிவரும் காலங்களின் அனைவரும் தங்களின் தொழிலை ஆன்லைன்வழியாக செய்வதற்கு ஏதுவாகின்றனர். இதனால் எல்லா வணிகங்களும் ஆன்லைன் மார்கெட்டிங் வேலைசெய்யும். ஒரு நிறுவனத்திற்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பங்கு என்ன? எந்த வகையான டிஜிட்டல் உள்ளடக்கத்தை உருவாக்க வேண்டும்? எனது உள்ளடக்கத்திலிருந்து முடிவுகளைப் பார்க்க எவ்வளவு நேரம் ஆகும்? ஜிட்டல் மார்க்கெட்டிங் செய்ய எனக்கு பெரிய பட்ஜெட் தேவையா? மொபைல் மார்க்கெட்டிங் எனது டிஜிட்டல் மார்க்கெட்டிங் உத்திக்கு எவ்வாறு பொருந்துகிறது? இன்று டிஜிட்டல் மார்க்கெட்டிங் எவ்வாறு வரையறுக்கிறார்கள்? என பல வினாக்களுக்கு அந்தத் துறையில் கால்பதிக்கும் பலரும் எழும் ஐயமாக இருக்கலாம். இவை அனைத்தும் நம் கண்முன்னே நிகழும் மாற்றங்கள் உணர்த்தும். மேலும் தகவல்களைப் பெற வீடியோக்களைப் பார்வையிடுங்கள்.

Add Comment

en English
X
+