சேமிப்பு – தொழில் துவங்குவதற்கான முதல்படி

Saving – The first step to starting a business

சேமிப்பு – தொழில் துவங்குவதற்கான முதல்படி

ஒரு தொழிலைத் துவங்க முதலில் முதலீடு அவசியமாகிறது. நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்வில் அன்றாட வேலை மற்றும் மாதந்திர திட்டத்தில் பட்ஜெட் வாழ்க்கை. இதையடுத்து பெரிய அளவில் நம்மை தொழில் நடத்தி உயர்த்திக்கொள்ள போதுமான பணம் வேண்டுமென்றால் கடன் அல்லது வங்கியில் லோன்.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நமக்குத்தேவையான பணத்தைப் பற்றியும் அதற்குண்டான செலவுகளைக் குறித்த பார்வை இருந்தால் சேமிக்க துவங்கி நமது தொழிலை துவங்கலாம்.

சேமிப்புத் திட்டங்கள்

  • வங்கிகள்
  • அஞ்சலகம்
  • இன்சூரன்ஸ்
  • பங்குவர்த்தகம்
  • பரஸ்பர நிதி

என பல்வேறு வகைகளில் நமக்கு சேமிப்புத் திட்டங்கள் கிடைக்கின்றன. அவற்றில் சரியான திட்டம் எதுவென்பதை அறிந்து அதில் முதலீடு செய்து நமக்குண்டான பணத்தை பெருக்கலாம்.

பணத்தை வெறுமனே உண்டியல் அல்லது வங்கியின் சாதாரண கணக்கில் வைத்திருந்தால் அது பயனற்றது. எனவே பணம் பணத்தை உருவாக்க போதுமான திட்டங்களில் முதலீடு செய்து பெருக்க செய்ய வேண்டும். அவ்வாறு சரியான முதலீடுகளில் நமது பணத்தை ஈடுபடுத்தி இலாபத்தைப் பெறலாம்.

தங்கம் பற்றிய குறிப்பு

கடந்து வந்த பாதையில் நமது முன்னோர்கள் நமக்கு பல்வேறு கருத்துகளை விட்டுச் சென்றுள்ளனர். அவற்றில் முதன்மையானது தங்கம். நாளுக்கு நாள் தங்கத்தின் மதிப்பு கூடிக்கொண்டேதான் போகிறது. எனவே தங்கத்தை வாங்கி வைத்தல் மற்றும் அதன் வாயிலாக வட்டிக்குப் பணம் பெறுதல் என பலவற்றை நாம் அறிந்து வைத்திருக்கிறோம். எனவே தங்கத்தை தற்போது உள்ள விலைநிலவரத்தில் வாங்கி பின்னாளில் அதன் மதிப்பு கூடும்பொழுது விற்றோ அல்லது வேறு ஏதேனும் வகையில் பணமாக்கலாம்.

 

PayTM Gold எனும் வசதியினை Paytm நிறுவனம் வழங்குகிறது. மிகக்குறைவான வகையிலும் அல்லது அதிகமான பணத்தாலும் நாம் ஆன்லைனில் தங்கத்தை வாங்கு எளியமுறை. அல்லது Paytm Money வாயிலாக பரஸ்பர நிதியின் மூலம் நமது பணத்தை முதலீடு செய்து சரியான இலாபத்தைப் பெறுதல்.

தொழில் துவங்குவதற்கு அடிப்படை

தொழில் துவங்க முதலில் நம்மிடம் சரியான முதலீடு இருக்க வேண்டும். முதலீடு இல்லாமல் கூட தொழில் துவங்கலாம். ஆனால் கடன் சுமையோடு துவங்கக் கூடாது.

கடன் இல்லாமல் தொழில் துவங்கும்போது பாது வெற்றியினைப் பெறுகிறோம்.

எனவே இன்றிலிருந்தே நீங்கள் பணத்தை சேமிக்க பழகுங்கள்.

Learn Other Tutorials


More Image Collection Buy Online to visit our Shopping website

https://www.instamojo.com/valavanpublications

Buy PSD Image Collection

 

 

Add Comment

en English
X
+